பாட்டொன்று கேட்டேன் பாடல் வரிகள்

Movie Name
Paasamalar (1961) (பாசமலர்)
Music
M. S. Viswanathan
Year
1961
Singers
Jamuna Rani
Lyrics
Kannadasan
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை

கூடொன்று கண்டேன் குயில் வரக் கண்டேன்
குரலால் அழைக்கவில்லை குரலால் அழைக்கவில்லை
குரலால் அழைக்கவில்லை
ஏடொன்று கண்டேன் எழுதிடக் கண்டேன்
நானதை எழுதவில்லை ஹோ நானதை எழுதவில்லை
நானதை எழுதவில்லை

குணமும் அறிவும் நிறைந்தவர் என்றார்
நானதை சொல்லவில்லை நானதை சொல்லவில்லை

ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே

பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை

நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்
சிரித்தார் பேசவில்லை சிரித்தார் பேசவில்லை
அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன்
சிரித்தேன் காணவில்லை சிரித்தேன் காணவில்லை

இருவர் நினைவும் மயங்கியதாலே
யாரோடும் பேசவில்லை யாரோடும் பேசவில்லை

ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே

பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.