Song lyrics

Ennai Yarendru Lyrics

என்னை யாரென்று பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Viswanathan Ramamoorthy
Year
1961
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyricist
Kannadasan
Ennai Yarendru

Lyrics

Ennai Yarendru Lyrics

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா..
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்….

எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… ஆ…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people