நெஞ்சம் மறப்பதில்லை பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Nenjam Marappathillai (1963) (நெஞ்சம் மறப்பதில்லை)
Music
Viswanathan Ramamoorthy
Year
1963
Singers
P. B. Srinivas, P. Susheela
Lyrics
Kannadasan

ஆஆ..............

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம்)

ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை (நெஞ்சம்)

ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும் மறு பிறப்பினிலும்நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன் (நெஞ்சம்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.