தேனடி மீனடி மானடி நீயடி பாடல் வரிகள்

Movie Name
Nenjam Marappathillai (1963) (நெஞ்சம் மறப்பதில்லை)
Music
Viswanathan Ramamoorthy
Year
1963
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan

தேனடி மீனடி மானடி நீயடி
செவ்வாய் மின்னும் சித்திரத் தங்கம் வா வா
பூவொரு பக்கம் பொட்டொரு பக்கம்
சூடும் பெண்ணைத் தேடும் கண்ணா வா வா

சொல்லாமல் கொள்ளாமல்
மின்னாமல் முழங்காமல்
தன்னாலே உருவாகும் காதல் இன்பம்
ஓஹோ ஓஹோய் ஓஓஹோய்

மாறாமல் மறையாமல்
கூடாமல் குறையாமல்
நீரோட்டம் போலோடும் காதல் இன்பம் (தேனடி)

கரையோரம் மணலுண்டு
கனிவான அழகுண்டு
இரவுண்டு பகலுண்டு உறவாடுவோம்
ஓஹோ ஓஹோய் ஓஓஹோய்

இரண்டொன்று புரியாமல்
இதயங்கள் பிரியாமல்
ஒன்றென்றும் என்றென்றும் உறவாடுவோம் (தேனடி)
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.