Song lyrics

Akkam Pakkam Lyrics

அக்கம்பக்கம் பார்க்காதே பாடல் வரிகள்

Last updated Jul 09, 2026

Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyricist
Kannadasan
Akkam Pakkam

Lyrics

Akkam Pakkam Lyrics

அக்கம்பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே
ஹாண்டில் பாரை ஓடிக்காதே

கையக் கைய வளைக்காதே
கண்ணைக் கண்டு மிரளாதே
பையப் பையா ஒதுங்கதே
பள்ளம் பார்த்து போகாதே 

அக்கம்பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே


போக்குவரத்து அதிகாமிருக்கு
மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ
பொண்ணப் பாத்தா போக்குவரத்தும்
நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ - இந்தப்
பொண்ணப் பாத்தா போக்குவரத்தும்
நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ
ஆஆஆஆ...ஓஓஓஓ.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 

அக்கம்பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே


போலீஸ்காரன் ஸ்டாப்பின்னு சொன்னா
பொத்துன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ
சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும்
பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ
ஆஹா பேஷ் பேஷ் அற்புதம்
அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு
அய்யா அருகில் இருந்ததினாலே
ஆபத்தில்லாமே போயிடுச்சு
இந்த அய்யா அருகில் இருந்ததினாலே
ஆபத்தில்லாமே போயிடுச்சு
ஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 

அக்கம்பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people