பித்தா பிரைசூடி பாடல் வரிகள்

Movie Name
Thiruvarutchelvar (1967) (திருவருட்செல்வர்)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
பித்தா பிரைசூடி பெருமானே அருளாளா
எத்தாள் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணை நல்லுர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலானேன்

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை
அந்த அம்மை இல்லாமல் இந்த பிள்ளை இல்லை
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா
சித்தம் எல்லம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.