தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே பாடல் வரிகள்

Movie Name
Thiruttu Raman (1955) (திருட்டு ராமன்)
Music
Pendyala Nageswara Rao
Year
1955
Singers
P. Susheela
Lyrics
Kannadasan

தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே
தெரிஞ்சுக்கோ பாபு நல்ல
வாழ்வே தினமும் காணுவாய் வீண்
வஞ்சகம் இல்லா வாழ்வையே...(தெரிஞ்சுக்கோ)

சில்லற பயல்களை கூடுவியா
கிள்ளி சண்டை போடுவியா ஓஓஒ
உயர் வாழ்வினை நீயே நாடணும்
நல்ல தூயவரோடு சேரணும்
பார் மீதிலே வாழ் நாளிலே நேர்மையை நீயே (தெரிஞ்சு)

கல்விக்கு கோலா சுற்றுவியா
குருவுக்கு நாமம் போடுவியா ஓஓஒ
புது பாடம் மறந்தே போவியா
பொல்லாதவரோடு சேர்வியா
பார் மீதிலே வாழ் நாளிலே நேர்மையை நீயே (தெரிஞ்சு)

விடிஞ்சதும் நீயே தாயின் பாதங்களை பணிவாயே
ஆஹா தினமும் பணிவாயே
மனதினில் தந்தையின் வாழ்வினை நீயே
மறந்திடலகாதே ஆஹா மறந்திடலாகாதேஓஓஒ
அறிவும் பொருளும் கண் போலவே
பகுத்தறிவை நீயும் மறவாதே
மனம் போலவே மகிழ்வாகவே ஏறுடன் வாழ்வாயே (தெரிஞ்சுக்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.