ஆடல் காணீரோ பாடல் வரிகள்

Movie Name
Madurai Veeran (1956) (மதுரை வீரன்)
Music
G. Ramanathan
Year
1956
Singers
M. L. Vasanthakumari
Lyrics
Kannadasan
ஆடல் காணீரோ ஆடல் காணீரோ
விளையாடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ
ஆடல் காணீரோ

பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ ஓ…

ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
ஏற்று வினை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ ஓ..

நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து
நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து உயர்
நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
நக்கீரார்க் குபதேசித்து
வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
வைரவளை முத்து வளை ரத்ன வளை
விற்ற விளையாடல் காணீரோ
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ ஓ…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.