அந்த மானைப் பாருங்கள் பாடல் வரிகள்

Movie Name
Andaman Kadhali (1978) (அந்தமான் காதலி)
Music
M. S. Viswanathan
Year
1978
Singers
K. J. Yesudas, Vani Jayaram
Lyrics
Kannadasan
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இன்பத் தேரில் தூவும் பன்னீர்

அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

இந்த மேகக் கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்
அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இந்தக் காதல் தூவும் பன்னீர்
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜ போக சொர்க்கம்
இனி பேச என்ன வெட்கம்

அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
என்ன இன்பம் அம்மா உன் இளமை
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும் ஊஞ்சல்

உங்கள் கைகள் என்ற சிறையில்
வரும் கால காலங்கள் வரையில்
நான் வாழ வேண்டும் உலகில்
அந்த மானைப் போல அருகில்

அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.