அத்திக்காய் காய் காய் பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Bale Pandiya (1962) (1962) (பலே பாண்டியா)
Music
Viswanathan Ramamoorthy
Year
1962
Singers
P. B. Srinivas, P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னைப் போல் பெண்ணல்லவோ
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ 

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ
என்னுயிரும் நீ அல்லவோ 

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே... ஏ... 

ஓ... ஓ... 

கன்னிக் காய் ஆசைக் காய் 
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய் 
மங்கை எந்தன் கோவைக் காய் 

கன்னிக் காய் ஆசைக் காய் 
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய் 
மங்கை எந்தன் கோவைக் காய்

மாதுளங்காய் ஆனாலும் 
என்னுளங்காய் ஆகுமா
எனை நீ காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ

இத் திக்காய் காயாதே 
என்னைப் போல் பெண்ணல்லவோ 

ஓ... ஓ... ஆ... ஆ...

இரவுக்காய் உறவுக்காய் 
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் 
நேரில் நிற்கும் இவளைக் காய் 

இரவுக்காய் உறவுக்காய் 
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் 
நேரில் நிற்கும் இவளைக் காய் 

புருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ

ஆஹாஹா ஹாஹாஹா
ஆஹாஹா ஹா...

ஏலக் காய் வாசனை போல் 
எங்கள் உள்ளம் வாழக் காய்
ஜாதிக் காய் பெட்டகம் போல் 
தனிமை இன்பம் கனியக் காய் 

ஏலக் காய் வாசனை போல் 
எங்கள் உள்ளம் வாழக் காய்
ஜாதிக் காய் பெட்டகம் போல் 
தனிமை இன்பம் கனியக் காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ 
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே 
என்னுயிரும் நீயல்லவோ

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ

ஆஹாஹா ஹாஹாஹா
ஆஹாஹா ஹா...

உள்ளமெலாம் மிளகாயோ 
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக் காய் பிளந்தது போல் 
வெண்ணிலவே சிரித்தாயோ 

உள்ளமெலாம் மிளகாயோ 
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக் காய் பிளந்தது போல் 
வெண்ணிலவே சிரித்தாயோ 

கோதை என்னை காயாதே 
கொற்றவரங்காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே 
தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ
ஆஹாஹா... ஆ... ஆ...
ஓஹோஹோ... ஹோ... ஹோ... ம்ஹும்... ஹும்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.