ஆதி மனிதன் பாடல் வரிகள்

Movie Name
Bale Pandiya (1962) (1962) (பலே பாண்டியா)
Music
Viswanathan Ramamoorthy
Year
1962
Singers
P. B. Srinivas
Lyrics
Kannadasan
ஆதி மனிதன் காதலுக்குப் பின் 
அடுத்த காதல் இது தான்

ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே 
அடுத்த ஜோடி இது தான்

ஆதி மனிதன் காதலுக்குப் பின் 
அடுத்த காதல் இது தான்

ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே 
அடுத்த ஜோடி இது தான்

கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன்

காதிலே கேட்டதும் காதலில் முழ்கினேன்

கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன்

காதிலே கேட்டதும் காதலில் முழ்கினேன்

அன்று அன்னத்திடம் தமயந்தி தூது விட்டாள் 

இன்றுஅண்ணனிடம் தங்கை ஒரு தூது விட்டாள்

அந்தக் காதல் காதலா 

இந்தக் காதல் காதலா

ஆதி மனிதன் காதலுக்குப் பின் 
அடுத்த காதல் இது தான்

ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே 
அடுத்த ஜோடி இது தான்

ஊரை விட்டு ஓடி வந்த காதல் 
இது உறவென்று சொல்லி வந்த காதல்
கால் நடையாய் வந்த காதல் 
இது காவியத்தில் இல்லாத காதல்

பேரை மட்டும் கேட்டு வந்த காதல் 
கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல்
ஊரார்கள் காணாத காதல் 
இது உலகத்தில் இல்லாத காதல்

இது தேவருக்கும் மூவருக்கும் சொந்தக் காதல் 

வெறும் மானிடர்க்குத் தோன்றாது இந்தக் காதல்

இந்தக் காதல் காதலா 

அந்தக் காதல் காதலா

ஆதி மனிதன் காதலுக்குப் பின் 
அடுத்த காதல் இது தான்

ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே 
அடுத்த ஜோடி இது தான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.