என்னடி பாப்பா சௌக்கியமா பாடல் வரிகள்

Movie Name
Enga Oor Raja (1968) (எங்க ஊர் ராஜா)
Music
M. S. Viswanathan
Year
1968
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

காலோடு மீன் வந்து மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ 
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ
நீரினில் ஆடிடும் பூவினை காணட்டும்
நேருக்கு நேரடியோ ஓ...
நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை 
வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

பொன்னான கைகளை மேற்புறம் தூக்கி
கும்பிடு போடடியோ 
புதிய கண்ணனின் கோபியை போலே
உடையை கேளடியோ
லீலைகள் செய்தவன் சேலையை தந்தால் 
நான் கொஞ்சம் வேறடியோ...
நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை 
வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.