சிரித்தாலும் அழுதாலும் பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Kalathur Kannamma (1960) (களத்தூர் கண்ணம்மா)
Music
R. Sudharsanam
Year
1960
Singers
Kannadasan
Lyrics
Kannadasan
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
வழி ஒன்றுதான்

சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்

இணைவதிலே இன்பம் பிரிவதிலே துன்பம்
உலகினில் மாறாத நீதி
வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று
வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று
மறைவது தான் வாழ்வில் பாதி
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்

ஆனந்த வெறியேறி ஆயிரம் பொய்கூறும்
மானிட சமுதாய எல்லை
இதில் தன்னலம் கருதாத தாய்மையை மறவாத
தன்னலம் கருதாத தாய்மையை மறவாத
பெண்மையும் இல்லாமல் இல்லை
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.