எனக்கும் உனக்கும்தான் பாடல் வரிகள்

Movie Name
Mugaraasi (1966) (முகராசி)
Music
K. V. Mahadevan
Year
1966
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
இனியாருக்கு இங்கே கிடைக்கும்

எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்கடலுக்கு நதியே சொந்தம்
காற்றுக்கு யார் சொந்தம் ?
நீருக்கு நிலமே சொந்தம்
நிழலுக்கு யார் சொந்தம் ?


மலருக்கு கூந்தல் சொந்தம்
மனதுக்கு நீயே சொந்தம்
வானுக்கும் நிலவே சொந்தம்
வஞ்சிக்கு நீயே சொந்தம்.. ஆஹா..

எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்


புல்லாலே வேலி கட்டி
பூவாலே மேடை இட்டு
நெல்லாலே வாசல் வைத்து
நேருக்கு நேரே நின்று


வெள்ளத்தில் வெள்ளம் வந்து
விழுந்ததைப் போலே இன்று
சொல்லாத வார்த்தை சொல்லி
சொர்க்கத்தைக் காண்பதற்கு..ஆஹா.ஹா.ஹா..

எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.