நினைக்கத் தெரிந்த மனமே பாடல் வரிகள்

Movie Name
Anandha Jodhi (1963) (ஆனந்த ஜோதி)
Music
Viswanathan Ramamoorthy
Year
1963
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

மயங்கத் தெரிந்த கண்ணே
உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே
உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா(நினைக்கத்)

எடுக்கத் தெரிந்த கரமே
உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே
உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே
உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே
உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
கொதிக்கத் தெரிந்த நிலவே
உனக்கு குளிரத் தெரியாதா

குளிரும் தென்றல் காற்றே
உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா
உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.