ஆத்தாடி யம்மாடி பாடல் வரிகள்

Movie Name
Idhayathai Thirudathe (1989) (இதயத்தை திருடாதே)
Music
Ilaiyaraaja
Year
1989
Singers
K. S. Chithra
Lyrics
Vaali
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

வானமும்... வையமும்...
கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும்... மலர்களும்...
ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன
தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சி எந்தன் கண்கள் கண்ட
தேவலோகம் பூமிதான்

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

என்னவோ... எண்ணியே...
இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு... மழைத்துளி...
சிதறிட சபலம்தான் அரும்புதா
வானதேவனே சல்லாபம் செய்திட
வாயுதேவனே முத்தாட வந்திட
நீறு பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும் ஓஹொஹோ

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.