சின்ன மணி பாடல் வரிகள்

Movie Name
Vanna Vanna Pookal (1992) (வண்ண வண்ண பூக்கள்)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
K. J. Yesudas, Vaali
Lyrics
Vaali
ஆண் : ம் ம் ம் ம் ம் ம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம் ம்
சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வாய்த்த திருவிளக்கு
சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வாய்த்த திருவிளக்கு
தெற்கு திசை வழியே தென்றல் வருமோ
தீபம் விடும் சுடரை தீண்டி விடுமோ

சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வாய்த்த திருவிளக்கு

***

ஆண் : அந்த பக்கம் நண்பனடி இந்த பக்கம் தங்கையடி
சொன்னதோ பாதி சொல்லாதது மீதி
அந்த கண்ணில் கற்பனைகள்
இந்த கண்ணில் சஞ்சலங்கள்
இரண்டையும் நான் தான் கண்டேன் இந்த நாளில்
எந்த வழி அமைப்பான் வானிருக்கும் தேவன்
அந்த வழி நடக்கும் மானிடரின் ஜீவன்
உன் வசம் என் வசம் என்ன தான் இங்கே
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத்தானே

சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வாய்த்த திருவிளக்கு

***

ஆண் : நள்ளிரவு நேரத்திலே நட்ட நாடு வானத்திலே
வெள்ளி மீன் போலே
நான் தான் உன்னைப் பார்ப்பேன்
நித்தம் இங்கு வாசலிலே பாடி வரும் தென்றலிலே
உன் குரல் ஓசை நான் தான் என்றும் கேட்பேன்
அண்ணன் தங்கை உறவு இப்பிறப்பில் தொடக்கம்
இன்னும் இது தொடர்ந்து எப்பிறப்பும் இருக்கும்
வந்ததும் வாழ்ந்ததும் கொஞ்ச நாள் ஆகும்
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத்தானே

சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வாய்த்த திருவிளக்கு
சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வாய்த்த திருவிளக்கு
தெற்கு திசை வழியே தென்றல் வருமோ
தீபம் விடும் சுடரை தீண்டி விடுமோ
தெற்கு திசை வழியே தென்றல் வருமோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.