சொல்லாத ராகங்கள் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Mahanadhi (1994) (மகா நதி)
Music
Ilaiyaraaja
Year
1994
Singers
S. Janaki, S. P. Balasubramaniam, Vaali
Lyrics
Vaali
பெண் : துவக்கம் எங்கே இது வரை சரிவரப் புரியவில்லை

ஆண் : தொடங்கியதை தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை

பெண் : புதிர்களும் புதுக்கவி புனைந்திட

ஆண் : நெருங்கிட என் மனம் மருகிட

பெண் : மயங்குதே கலங்குதே

ஆண் : சொல்லின்றியே தயங்குதே

பெண் : அலைகள் எழுந்து கரைகள் கடந்து
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன (இசை)

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

பெண் : எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புது யுகம் அரும்புமோ

ஆண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

பெண் குழு : அஹ ஹஹா..அஹ ஹஹா..ஹா..(இசை)
ஆஹ ஹஹஹா..ஹாஹ ஹஹா..

***

ஆண் : காவல் வைத்தாலும் உன்மீது
ஆவல் கொண்டாடும் உள்ளம் உள்ளம்

பெண் : காலம் கைகூடும் என்றெண்ணி
காதல் கொண்டாடும் எண்ணம் எண்ணம்

ஆண் : கூண்டில் என் வாசம் என்றாலும்
மீண்டும் நான் வந்தால் அந்நேரம்
வேண்டும் நான் வாழ உந்தன் நெஞ்சம்

பெண் : வானம் நின்றாலும் சாய்ந்தாலும்
வையம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பாவை பெண் பாவை உந்தன் தஞ்சம்

ஆண் : ஜீவன் வெவ்வேறு ஆகாமல்
ஜென்மம் வீணாகிப் போகாமல்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புது யுகம் அரும்புமோ

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன (இசை)

பெண்குழு : ஆஹ ஹஹஹா..ஹாஹ ஹஹா..

***

பெண் : நாட்கள் ஒவ்வொன்றும் துன்பம்
தூக்கம் இல்லாமல் செல்லும் செல்லும்

ஆண் : வீசும் பூந்தென்றல் உன்பாட்டை
நாளும் என் காதில் சொல்லும் சொல்லும்

பெண் : பாரம் நெஞ்சோரம் என்றாலும்
ஈரம் கண்ணோரம் என்றாலும்
உள்ளம் உன் பேரைப் பாடும் பாடும்

ஆண் : நேசம் எந்நாளும் பொய்க்காமல்
நெஞ்சைத் துன்பங்கள் தைக்காமல்
நாளை பொற்காலம் கூடும் கூடும்

பெண் : நெஞ்சில் எப்போதும் உன் எண்ணம்
கண்ணில் எந்நாளும் உன் வண்ணம்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புது யுகம் அரும்பலாம்

ஆண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

பெண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

ஆண் : எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.