குக்குக் கூவென கூவும் பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Corona (2021) (கொரோணா)
Music
Anirudh Ravichander
Year
1988
Singers
S. P. Balasubramaniam, K. S. Chitra
Lyrics
Vaali
பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு
பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு

ஆண் : கன்னத்தோடு கன்னம் வைத்து
கள்ளெடுக்கும் கள்ளன் நானே
பெண் : தேக்கி வைத்த தேனை எல்லாம்
பாக்கி இன்றி தந்தாள் மானே

ஆண் : காவேரி மீனை கஸ்தூரி மானை
கையோடு ஏந்த கும்மாளமோ
பெண் : காவல் மீறும் எண்ணம் வந்ததோ
பாவை வண்ணம் போதை தந்ததோ

ஆண் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
பெண் : இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு

பெண் : மேற்கில் போகும் மேகம் ஒன்று
வானம் பார்க்கும் மண்ணைக் கண்டு
ஆண் : தூறல் போடும் நேரம் இன்று
வாழ வேண்டும் வாழைக்கன்று

பெண் : வேரோடும் மண்ணில் நீரோடும் போது
ஏதேதோ எண்ணம் உண்டாகுமோ
ஆண் : காமன் போடும் பாணம் அல்லவோ
காயம் மாறும் மாயம் சொல்லவோ

பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு
புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு
பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது
அரங்கேறுது புது சுரம் பாடுது
ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.