இரும்பு பெட்டியிலே இருக்கின்ற பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Manaivi Oru Manthiri (1988) (மனைவி ஒரு மந்திரி)
Music
Shankar-Ganesh
Year
1988
Singers
Malasiya Vasudevan
Lyrics
Vaali
இரும்பு பெட்டியிலே இருக்கின்ற நாயகனே
கல்லாப் பெட்டியிலே கண்ணுறங்கும் கண்மணியே
கருப்பும் வெள்ளையுமா உருவெடுக்கும் வெள்ளையப்பா
உன் அருமைகளும் பெருமைகளும்
கடவுளுக்கும் இல்லையப்பா.....யப்பா.....

ஹேய் பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க
பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க
நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ சூடம் சாம்பிராணிதான்
காசு இல்லாம கடையில் கிடைக்காது சிக்கன் பிரியாணிதான்

பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க...

சொந்த பந்தமெல்லாம் சிஷ்யா ஒப்பன் ஆயாச்சுடா
சேத்து வச்சவரு சிஷ்யா நேத்து போயாச்சுடா
சொந்த பந்தமெல்லாம் சிஷ்யா ஒப்பன் ஆயாச்சுடா

கல்லறை ஈரம் காயல அதுக்குள் சில்லற வழக்குதான்
லட்சியம் பேசும் கட்சியும் உடைஞ்சு போவதும் அதுக்குதான்
காசலத்தான் என்னாளுமே பூசல்கள் உண்டாகுது
ரத்தத்தோட ரத்தங்களும் யுத்தங்கள் கொண்டாடுது

சாமிகள் பாடுது பாட்டு காரணம் ரூபா நோட்டு ஹோய்..
சாமிகள் பாடுது பாட்டு காரணம் ரூபா நோட்டு
பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க

நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ சூடம் சாம்பிராணிதான்
காசு இல்லாம கடையில் கிடைக்காது சிக்கன் பிரியாணிதான்
பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க...

காசி ராமேஸ்வரம் போக காலம் வரவில்லையே
குழந்தை வேணுமென்று தாரம் போகவிடவில்லையே
சாமியார் எனக்கு மாமியார் இருக்கும் சேதிதான் தெரியுமே
பிள்ளைதான் பிறந்த பிறகுதான் எனது தொல்லைதான் விடியுமே

பிள்ளைக்கு ஏங்குது மயிலு காரணம் அந்த உயிலு
பிள்ளைக்கு ஏங்குது மயிலு காரணம் அந்த உயிலு
பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க

நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ சூடம் சாம்பிராணிதான்
காசு இல்லாம கடையில் கிடைக்காது சிக்கன் பிரியாணிதான்
பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க...

பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.