புதியது பிறந்தது பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Devar Magan (1994) (தேவர் மகன்)
Music
Ilaiyaraaja
Year
1994
Singers
Malaysia Vasudevan
Lyrics
ஆண் : அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
ஒண்ணாசி பாரு இதுவரை ரெண்டான ஊரு
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா...

ஆண் &
பெண்குழு-1 : அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே

ஆண் : ஏய்..

***

ஆண் : கூடாம நம்மத்தான் கூறு கட்டி சிலர்
கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி
ஆத்தாடி அண்ணந்தான் தோளுதட்டி
அதை சாய்ச்சாரு மண்ணுல வாளில் வெட்டி
உள்ளத் துணிவு உள்ளவரு ஊருக்குதவும் நம்மவரு
பாத்தியத்தார் கொட்டுத்தான்

பெண்குழு-1 : கொட்டுத்தான் கொட்டுத்தான்

ஆண் : ஓசையெல்லாம் எட்டட்டும்

பெண்குழு : திக்கெட்டும் எட்டட்டும்

ஆண் : அடி அம்மாடி எல்லோரும் ஆட்டம் போடும் நாள்தானோ

ஆண் : அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
ஒண்ணாசி பாரு இதுவரை ரெண்டான ஊரு
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா...

ஆண் &
பெண்குழு : அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே

ஆண் : ஹஹ் ஹஹே....

பெண்குழு-1: அற்புதமா பெண்குழு-2: அதிசயமா

பெண்குழு-1: பூத்திருக்கு பெண்குழு-2: முத்து நகை

பெண்குழு-1: ரத்தினமா பெண்குழு-2: கெடைச்சிருக்கு

பெண்குழு-1: நிச்சயமா பெண்குழு-2: நம் பெருமை

பெண்குழு-1: காத்திருக்கும் பெண்குழு-2: பத்திரமா

பெண்குழு-1: சக்தியவ பெண்குழு-2: துணையிருப்பா

***

ஆண் : மூவேந்தர் பேர் இட்ட சீமையடி
நம்ம முப்பாட்டன் ஏர் விட்ட பூமியடி
வெள்ளாடு சிங்கத்தை சாடுமடி
இந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடி
மண்ணின் பெருமை காத்திடணும்
அண்ணன் மொழியை கேட்டிடணும்

ஆண் : ஓர் இனத்து மக்கள் தான்

ஆண்குழு-1 &
பெண்குழு-1 : நாமெல்லாம் கண்ணம்மா

ஆண் : ஓர் வயித்து பிள்ளைதான்

ஆண்குழு-1 &
பெண்குழு-1 : எல்லோரும் பொன்னம்மா

ஆண் : அடி அம்மாடி தெம்மாங்கு பாட்டு பாடும் நாள்தானோ

ஆண் : அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
ஒண்ணாசி பாரு இதுவரை ரெண்டான ஊரு ஹைய்...
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா...

ஆண் &
ஆண்குழு-1 &
பெண்குழு-1: அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே....ஏய்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.