புத்தம் புதியது முத்தம் பாடல் வரிகள்

Movie Name
Poove Ilam Poove (1987) (பூவே இளம் பூவே)
Music
Amal Dev
Year
1987
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Kamakodiyan

ஆண் : புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே

விழி பூக்கள் பூத்தது காதல்
இதன் வித்தைகள் எத்தனை நாவல்
இது வாலிப நூலகமாகும்
நாம் கற்றது கையளவு ஆகும்

பெண் : புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே

பெண் : விண்வெளியில் வெண்முகிலில்
சித்திரம் தீட்டீயது யாரோ
விந்தைகளில் தந்தை இது,
இதுதான் கடவுளின் ஊரோ

ஆண் : பொன்முகிலின் புன்னகையில்
என் மனதில் கார்காலம்
புல்வெளியில் மின்மினிகள்
கண் நிறையும் பனிக் கோலம்
பெண் : மாலை நேர சோலைகளை மேடை போடுங்கள்
மவுனம் கூட காதலரின் மேள தாளங்கள்

ஆண் : புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே

பெண் : விழி பூக்கள் பூத்தது காதல்
இதன் வித்தைகள் எத்தனை நாவல்
இது வாலிப நூலகமாகும்
நான் கற்றது கையளவு ஆகும்

ஆண் : புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே

ஆண் : புது நதியா மது நதியா
ஒளி நதியா உன் கண்கள்
இள நதியா வளர் நதியா
கிளை நதியா கன்னங்கள்

பெண் : கார்த்திகையா மார்கழியா
காற்றில் பனி நம்மை வாட்டும்
கை அணையும் மெய் அணையும்
காதல் சுகமது மூட்டும்
ஆண் : மோக முல்லை பாடுவதே ராக ராகங்கள்
முத்துமாலை ஆடுவதேன் ராஜ யோகங்கள்

பெண் : புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.