முத்து ரதமோ முல்லைச் சாரமோ பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Ponnagaram (1980) (பொன்னகரம்)
Music
Shankar-Ganesh
Year
1980
Singers
P. Jayachandran, Vani Jayaram
Lyrics
Kamakodiyan

முத்து ரதமோ முல்லைச் சாரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு.....

முத்து ரதமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவி பாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு.....

உனது பார்வை எனது பாடல்
தினமும் நான் பாட
நினைவில் கனவில் சுகமோ
உலக நிலையை மறந்து கொஞ்சம்
விண்ணில் நான் ஆட
அமுதக் கனிகள் தருமோ

இரவுக்காலம் நிலவுக் கோலம்
இதயம் மயங்காதோ
உறவுத் தேரில் உரிமைப் போரில்
என்னை இழுக்காதோ ஓ...ஓ...ஓ..ஓ..(முத்து)

வானில் வசந்தம் தேனின் சுவை போல்
நேரில் வாராதோ.....
உறவில் கலைகள் வளரும்
மனதில் பேதம் அதிக தூரம்
கண்ணில் தெரியாது
தினம் சுவைகள் மலரும்

உலக மயக்கம் விலகும் நேரம்
பருவம் விழிக்காதோ
உறவும் என்ன பகையும் என்ன
காலம் மாறாதோ ஓ...ஓ...ஓ....(முத்து)