வாழுகின்ற மக்களுக்கு பாடல் வரிகள்

Movie Name
Ponnagaram (1980) (பொன்னகரம்)
Music
Shankar-Ganesh
Year
1980
Singers
K. J. Yesudas
Lyrics

இருப்பவர்க்கு ஒரு வீடு
இல்லாதவர்க்கு பல வீடு
யாரை நம்பி யாரும் இல்ல
ஆண்டவன் துணையை நீ தேடு….

வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி

சேர்த்து வச்ச புண்ணியம் தான்
சந்ததியைக் காக்குமடி
அந்த வகையில் இந்த நிலையில்
எனக்கோர் காவல் ஏதடி..(வாழுகின்ற)

ஆடொன்று வளர்ப்பார்கள் தன் வீட்டில்
மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்
உறவொன்று விருந்தென்று வரும் போது
இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது.(வாழுகின்ற)

தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள்
உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்
சரியான நேரத்திலே தெய்வம் வரும்
எது சரியென்று உள்ளங்கள் தெளிந்து விடும் (வாழுகின்ற)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.