Oru Aalapoovu Athipoovu Lyrics
ஒரு ஆலம் பூவு பாடல் வரிகள்
மேலமாசி வீதியில மேளச் சத்தம் கேக்குதடி
மீனுக் கண்ணு மீனாட்சியின்
முத்துமணி மால ஒண்ணு
ஓம் மேனியிலே சூடிக் கொண்டு
சோடி ஒண்ணு தேடி வந்த
முத்தம்மா முத்தம்மா முத்தம்மா
அட முத்தம்மா முத்தம்மா முத்தம்மா
ஒரு ஆலம் பூவு அத்திப் பூவப் பாத்ததுண்டா
ஒரு ஏலம் பூவு எலந்தம் பூவச் சேத்ததுண்டா
மோகம் கொடுக்கும் மார்கழிப் பூ
தாகம் தணிக்கும் தாவணிப் பூ
மொட்டுத்தான் மொட்டு துள்ளுதடி இள மொட்டு
சிட்டுத்தான் சிட்டு சிணுங்குதடி கை பட்டு....(ஒரு ஆலம்)
புன்னவனத்துப் பூங்குருவி சொன்னதிங்கே ஓம் பேரு
ஊதக் காத்து அடிக்குதையா ஓரப் பார்வ நீ பாரு
தனிமை என்ன வழி மறிச்சு தாளம் போட்டு சிரிக்குதடி
தாகம் என்ன அரவணச்சு தழுவிக் கொள்ளச் சொல்லுதடி
நேந்துக்கிட்ட சாமிக்கு நேத்திக் கடன் செய்யிறேன்
வா மணிக் குயிலே......
ஒரு ஆலம் பூவு அத்திப் பூவப் பாத்ததுண்டா
ஒரு ஏலம் பூவு எலந்தம் பூவச் சேத்ததுண்டா
பார்வையாலே ஒடம்புக்குள்ளே
பதியம் போட்ட வெடலப் புள்ள
நம்மைப் பிரிக்க யாரும் இல்ல
நடுவில் எந்த ஊரும் இல்ல
பழகிப் போச்சு அச்சம் இல்ல
பேச எதுவும் மிச்சம் இல்ல
நெஞ்சுக்குள்ள காத்தடிச்சு
நேரம் பாத்து சேத்திடுச்சு
முத்துமணி கட்டவா கட்டிக் கொண்டு ஒட்டவா
வா மணிக் குயிலே.......
ஒரு ஆலம் பூவு அத்திப் பூவப் பாத்ததுண்டா
ஒரு ஏலம் பூவு எலந்தம் பூவச் சேத்ததுண்டா
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.