Gandhiyaiyum Pathathilla Lyrics
காந்தியையும் பாத்ததில்ல பாடல் வரிகள்
காந்தியையும் பாத்ததில்ல
நேருவையும் பாத்ததில்ல
எங்களுக்கு காந்தியும் நேருவும்
அய்யனாரு அண்ணன் தான்
சுபாஷ் சந்திரபோஸ பாத்ததில்ல
அம்பேத்கார பாத்ததில்ல
எங்களுக்கு அவங்களெல்லாம்
அய்யனாரு அண்ணன் தான்
நாட்டுக்குன்னு நல்லா ஒழைச்சவங்க
நெரந்தரமா இங்கே நெலச்சவங்க
அவங்க நம்ம அண்ணனப் போல
அண்ணனப் பாரு அவங்க போல......(காந்தி)
பாட்டுச் சொல்லி வெள்ளையனுக்கு
வேட்டு வெடிச்ச பாரதியாரு
நாட்டுக்குள்ள சுண்டனையும்
படிக்க வெச்ச காமராசரு
மூடத்தனம் விரட்டி நம்ம
முழிக்க வெச்ச பெரியாரு
கண்ணாக நாம என்னும்
அண்ணா என்னும் பெரியவரு
எத்தனையோ உத்தமர் எல்லாம்
இருந்ததுண்டு பாத்ததில்ல
நல்லதெல்லாம் சொன்னாங்கன்னு
படிச்சதுண்டு கேட்டதில்ல
அத்தன பேரும் ஒண்ணாச்சு
அண்ணன் வடிவில் வந்தாச்சு
அண்ணனப் பத்தி படிச்சதில்ல
அறிஞ்சதெல்லாம் எடுத்து விடு...(காந்தி)
அப்பனோட அப்பனப் பெத்த
அப்பனக் கூடப் பாத்ததில்ல
அப்ப நானும் பொறந்ததில்ல
அப்ரகாம் லிங்கனப் பாத்ததில்ல
உங்கொப்புரானே செங்கொடி புடிச்ச
லெலின நானும் பாத்ததில்ல
அப்புறமா அடியெடுத்த
ஸ்டாலினக் கூடப் பாத்ததில்ல
வ.ஊ.சிய ராசாசிய மா.பொ.சிய பாத்ததில்ல
இன்னும் உண்டு ரொம்ப பேரு
விட்டுப் போச்சு நெனப்பில் இல்ல
அத்தன பேரும் ஒண்ணாச்சு.......(காந்தி)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.