கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Pennin Manathai Thottu (2000) (பெண்ணின் மனதை தொட்டு)
Music
S. A. Rajkumar
Year
2000
Singers
Anuradha Sriram, Devan
Lyrics
Vaali

கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
என் மடி மீது சாய்ந்த நிலாவோ
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ

ஹைக்கூவே ஹைக்கூவே
ஹை ஸ்பீட்டில் வந்தாயே
ஐ ப்ரோவை மேல் தூக்கி
ஐ லவ் யூ என்றாயே

கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
ஹைக்கூவாய் ஹைக்கூவாய்
ஐ லவ் யூ என்றாயே

ஏப்ரல் மே எப்போதும்
வெப்பத்தில் வெப்பத்தில்
என்றாலும் எண்ணங்கள்
தெப்பத்தில் தெப்பத்தில்

டால்பின்-கள் துள்ளாதா
உள்ளத்தில் உள்ளத்தில்
உள்ளுக்குள் உண்டாகும்
வெள்ளத்தில் வெள்ளதில்

பொல்லாத ஆடவா
நான் பூப்பந்து ஆடவா
உன்னாலே இம்சைகள் உண்டாகும்

போக போக
இம்சைகள் எல்லாமே
இன்பங்கள் தானம்மா

இச்சென்று சத்தங்கள்
உண்டாக கூடும் கூடும்
சத்தங்கள் எல்லாமே


முத்தங்கள் தானம்மா
பூ பூ பூ பூச்செண்டு
புயலில் போராடும்

கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ

பெண்ணோட பல்ஸ் என்ன
பார்த்தேனே பார்த்தேனே
ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்
சொல்வேனே சொல்வேனே

செவ்வாழை மேனிக்குள்
என்னையா என்னையா
ஸ்கானிங் நான் செய்யாமல்
சொல்லையா சொல்லையா

நான் பார்த்தால் பாவமா
நீ நாள் பார்த்து பார்க்கவா
அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற
கேஸும் உண்டு

அன்பே உன் ஆசை தான்
ஆபரேஷன் கேஸ் அல்ல

எல்லைக்குள் நில்லென்றால்
என் நெஞ்சம் மீறும் இன்று
கண்ணாளா நம் காதல்
கார்கில் வார் போர் அல்ல

த த த தள்ளாதே
இளமை ஏற்காதே

கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
என் மடி மீது சாய்ந்த நிலாவோ
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ

ஹைக்கூவே ஹைக்கூவே
ஐ லவ் யூ என்றாயே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.