பேர் வச்சாலும் வைக்காம பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Michael Madana Kamarajan (1990) (மைக்கேல் மதன காமராஜன்)
Music
Ilaiyaraaja
Year
1990
Singers
Malaysia Vasudevan, S. Janaki
Lyrics
Vaali
பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்

காமன் குண்றத்தில் காதல் மண்றத்தில் சேரலாம் சேரலாம்

கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்

காமன் குண்றத்தில் காதல் மண்றத்தில் சேரலாம் சேரலாம்

மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்

சந்தோஷம் பெறலாமா ஹே அதில் சந்தேகம் வரலாமா

பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு
மெல்லத் தான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் 

ஹேய்

அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்ட தான் அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

காதல் மன்னனாம் நீயும் கண்ணனாம் நாளும் ஓர் அலங்காரமா

தோளில் மெல்லத் தான் தேதி சொல்லத் தான் தோன்றினேன் அவதாரமா

காதல் மன்னனாம் நீயும் கண்ணனாம் நாளும் ஓர் அலங்காரமா

தோளில் மெல்லத் தான் தேதி சொல்லத் தான் தோன்றினேன் அவதாரமா

கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது

கல்லால அணை போட்டு ஹேய் இந்த காவேரி அடங்காது

அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டிப்போ அப்பபப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம் ஹேய் ஹேய்

அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பப்பா

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.