ஏதோ ஒன்று உன்னை பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Lesa Lesa (2003) (லேசா லேசா)
Music
Harris Jayaraj
Year
2003
Singers
Harish Raghavendra, Srilekha Parthasarathy, Udit Narayan
Lyrics
Vaali
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
(ஏதோ..)

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது

தாய்மடியில் சேய்தான் வரலாமா?
தள்ளி நின்று துன்பம் தரலாமா?
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா

குழந்தையும் குமரியென்றாயாச்சே,
கொஞ்சிடும் பருவமும் போயாச்சே.
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாய் ஆச்சா
(ஏதோ..)

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ, எனக்கென செய்வாயோ?

இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
(உன் பாதம்..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.