லேசா லேசா பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Lesa Lesa (2003) (லேசா லேசா)
Music
Harris Jayaraj
Year
2003
Singers
Anuradha Sriram
Lyrics
Vaali
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே ஏ
(லேசா..)

நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் வாலாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்ட கால ௨றவிது ௨றவிது உறவிது உறவிது உறவிது உறவிது..

வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சுக் காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
(வெவ்வேறு..)
நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய
ஒருவரில் ஒருவரின் உயிர் கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது
(லேசா..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.