வெள்ளி நிலவே பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Nanthavana Theru (1995) (நந்தவனத் தேரு)
Music
Ilaiyaraaja
Year
1995
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
ஆண் : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோறூட்ட
உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட

ஆண் : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

****

ஆண் : விண்ணில் ஓடி தன்னால் வாடும் நிலவே நாளும் உருகாதே
ஆண் & ஆ -குழு : உன்னை பாடி மண்ணில் கோடி கவிதை வாழும் மறவாதே
ஆண் : நிலா சோறு நிலா சோறு தரவா நீயும் பசியாற
ஆண் & ஆ -குழு : குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக
ஆண் : வானவில்லும் தானிறங்கி பாய் போடும் நீயும் தூங்க
ஆடும் மயில் தோகை எல்லாம் தாலாட்டியே காத்து வீச
தேவ கன்னியே தேய்வதென்ன நீ தன்னாலே

ஆண் & ஆ -குழு : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

****

ஆண் : சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனைப் பாரு
ஆண் & ஆ -குழு : நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு
ஆண் : உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு
ஆண் & ஆ -குழு : உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு
ஆண் : வானத்தோடு கோவம் கொண்டு நீ போவதேன் பால் நிலாவே
வானம் காக்க நாங்கள் உண்டு நீ நம்பியே பார் நிலாவே
தேவ கன்னியே.. தேய்வதென்ன நீ தன்னாலே

பெண் : வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன் சோகம் தீர்ந்திட தானே தேடுது
மின்னும் நிலவே உன்னாலே வருதே பாடி சோறூட்ட
தள்ளி நடந்தால் வேறாரு வருவார் என்னை காப்பாற்ற

பெண் : வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது

ஆண் & ஆ -குழு : தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.