தென்றலே தென்றலே பாடல் வரிகள்

Movie Name
Kadhal Desam (1996) (காதல் தேசம்)
Music
A. R. Rahman
Year
1996
Singers
Mano, P. Unnikrishnan, Vaali
Lyrics
Vaali
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீ யானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி
நீயே வாடினாயோ


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன்
நான் தூக்கமின்றி வாடினேன்


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.