ஹேய் பொட்டப் புள்ள பாடல் வரிகள்

Movie Name
Neruppu Nila (1987) (நெருப்பு நிலா)
Music
Shankar-Ganesh
Year
1988
Singers
Ramesh, Manjula
Lyrics
Vaali
ஆண் : ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே
ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே
ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு
நீங்களெல்லாம் சமைப்பதற்கு
ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்
பொல்லாத நோட்டங்கள் ஏன்மா

பெண் : யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல
யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல
நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான்
போக்கிரியை ஒடிப்பவள் நான்
ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்
பொல்லாத நோட்டங்கள் ஏன்யா

ஆண் : பொண்ணு அழகு கண்ணு
பிள்ளைப் பூச்சியும் நீயும் ஒண்ணு ஹேய்
வீடு உனக்கு கூடு வெட்டிப் பேச்சுகள் வேணாம் ஓடு

பெண் : ஹாஹ் ஜான்சிராணி நான்தான்
வா நீ மீசை மண்ணோடுதான்
நீதி நேர்மை வீரம் யாவும் பெண்ணோடுதான்
ஆண் : மச்சக்காள கொம்பு இருக்கு
தொட்டுப் பார்த்தா வம்பு உனக்கு

பெண் : யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல
யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல
ஆண் : ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு
நீங்களெல்லாம் சமைப்பதற்கு
பெண் : ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்
பொல்லாத நோட்டங்கள் ஏன்யா
ஆண் : ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே

பெண் : ஹாங் சூடு சொரணை ஏது
உங்க சரித்திரம் பாக்கும்போது
நாயும் நரியும் பேயும் உங்கள்
வடிவத்தில் ஊரில் மேயும்

ஆண் : மானே பேசு வார்த்தை வீசு
பின்னால் திண்டாட்டம்தான்
பாவம் நீதான் பூப்போல்
ஆள வந்தேன் வண்டாட்டம்தான்
பெண் : ஹாங் மங்கம்மாதான் எங்க இனம்தான்
அஞ்சிடாது எங்க மனம் தான்

ஆண் : ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே
பெண் : நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான்
போக்கிரியை ஒடிப்பவள் நான்
ஆண் : ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்
பொல்லாத நோட்டங்கள் ஏன்மா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.