சக்தி சக்தி ஓம் பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Neruppu Nila (1987) (நெருப்பு நிலா)
Music
Shankar-Ganesh
Year
1988
Singers
S. Janaki
Lyrics
Vaali
சக்தி சக்தி ஓம் சக்தி சக்தி ஓம் சாமுண்டி
பக்தி கொண்டவரை பரிவு கொண்டருளும் சாமுண்டி
இங்கே மாகாளி நானே திரிசூலி
இங்கே மாகாளி நானே திரிசூலி

தீய சக்திகளை ஓட்ட வந்ததொரு சிவசக்தி
தூய அன்புடனே காத்திட வந்த பராசக்தி
தேவி கருமாரி நானே திரிசூலி
தேவி கருமாரி நானே திரிசூலி

தாயும் பெண்தான் மனைவியும் பெண்தான் சொந்தம் வேறு
மேயும் கண்கள் பெண்ணை பார்க்கும் எண்ணம் வேறு
பூவைப் போன்றவள் பெண்ணே புலியென பாய்பவள் பெண்ணே
பூவைப் போன்றவள் பெண்ணே புலியென பாய்பவள் பெண்ணே

காலத்தை வெல்பவள் காமத்தை கொல்பவள்
மதுரை எரித்தவள் பெண்ணே
சங்கரி சாம்பவி வடிவத்தில் இருப்பவள் பெண்ணே
சங்கரி சாம்பவி வடிவத்தில் இருப்பவள் பெண்ணே

சக்தி சக்தி ஓம் சக்தி சக்தி ஓம் சாமுண்டி
பக்தி கொண்டவரை பரிவு கொண்டருளும் சாமுண்டி
இங்கே மாகாளி நானே திரிசூலி
இங்கே மாகாளி நானே திரிசூலி

சூலம் கையில் சுடுகின்ற தணலென மின்னும் கண்கள்
யமனைக் கூட நடுங்கிட வைத்திடும் கரிய தேகம்
உதிரத்தை குடிப்பவள் நானே உயிர்களை வளர்ப்பதும் நானே
உதிரத்தை குடிப்பவள் நானே உயிர்களை வளர்ப்பதும் நானே

எதிரில் தோன்றும் விதியை வென்று எந்நாளும் நிற்பவள் நானே
அம்பிகை பைரவி அருள் மழை பொழிவதும் நானே
அம்பிகை பைரவி அருள் மழை பொழிவதும் நானே

சக்தி சக்தி ஓம் சக்தி சக்தி ஓம் சாமுண்டி
பக்தி கொண்டவரை பரிவு கொண்டருளும் சாமுண்டி
இங்கே மாகாளி நானே திரிசூலி
இங்கே மாகாளி நானே திரிசூலி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.