Andha Kandamani Lyrics
அந்த கண்டமணி ஓசை பாடல் வரிகள்
பாண்டிமலையாம் காசி ராமேஸ்வரம்
அடக்கி ஆளும் ஆண்டியப்பா
தளுவனான தங்கச்சி பேச்சியம்மா
பேய்க்காமன் ஒனக்குள்ள அடக்கமப்பா
ஆடி வெள்ளி பூத்திருக்கு உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளியே வா வெளியே வா வெளியே வா
விரு விருமாண்டி விருமாண்டி
விரு விருமாண்டி விருமாண்டி.....
அந்த கண்டமணி ஓசை கேட்டிருச்சு
எங்க கலியுகத்துச் சாமி வெளியே வா
எங்க வாக்குப் படி ஆடி வெள்ளியில பூச
ஏத்துக்கொள்ள சாமி வெளியே வா
பேய்க்காமன அடக்கி வெச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்புடுறா
சாதி சனம் படையல் வெச்சு காத்திருக்கு
சத்தியத்தக் காத்துப்புடு........( அந்த )
உதவ கரம் கொடுத்த சாமியே
ஒன்னத்தான் ஒடுக்கி அடைச்சது பாவம்
சண்டப்ப சண்டக்காமன் மறுபடி எழுந்தா
தஞ்சமா நாங்க எங்க போவோம்
திக்கத்த ஏழைக்கிங்கே ஒன்ன விட்டா
கஷ்டத்தில் கை கொடுக்க யார் இருக்கா
பிள்ளை செஞ்ச குத்தம் எல்லாம்
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பாள்
கொறை ஏதும் இல்லாத சாமி
எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி (அந்த)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.