சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் பாடல் வரிகள்

Movie Name
Virumaandi (2004) (விருமாண்டி)
Music
Ilaiyaraaja
Year
2004
Singers
Shreya Ghoshal
Lyrics
Muthulingam
ஈச ஈசானே ஈசக் கரையானே
ஒங்கப்பனும் ஆத்தாளும்
தண்ணிக் கரை ஓரம் செத்துக் கெடக்காங்க
அங்குட்டு போனீனா ரெக்கைய பிப்பாங்க
என் கிட்ட ஓடியா என் கிட்ட ஓடியா

சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் ஒங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க
அந்தியில சந்தயில அங்க அங்க ஒங்க மொகம்
வந்து வந்து வாட்டுதென்ன வார்த்த சொல்லுங்க

ஊரும் ஒரு மாதிரிதான் உன்ன என்ன பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்டபடி பேசுதையா
கவலை இல்ல காத்தில விடும் பதிலச் சொல்லு
சண்டியரே சண்டியரே கண்ணு.......

வீராப்பு பேசி நின்ன வெரட்டும் என்ன
வீட்டுக்குள்ளே உன் உருவம் வெரட்டுது
அடங்காத காளையப் போல் அடிமனசு
அத்தனையும் உன் நெனப்பில் அடங்குது

ஈசலப் போல் நான் பறந்து வெளிச்சத்த தேட
ஈசனப் போல் நீ இருந்து உன் ஒளியில் போட
சிறகோட பறந்தாலும் சிறு போது உனைச் சேர
ஆச வேறென்ன பேச
சண்டியரே சண்டியரே கண்ணு....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.