Onnavida intha ullakathil Lyrics
உன்னை விட இந்த உலகத்தில் பாடல் வரிகள்
Last Updated: Mar 25, 2023
உன்னை விட இந்த உலகத்தில்
ஒசந்தது ஒண்ணும் இல்லை ஒண்ணுமில்ல
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட
யாருமில்லை யாருமில்லை
வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க
யாருமில்லை எவளுமில்லை
உன்னை விட…..என்னை விட……..
அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம்
என்னை போலவே அலை பாயுது
நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே
துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம்
அனல் ஆகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கானாக்களா வந்து கொல்லுது
இதுக்கு பேருதான் மோட்சமா
மோட்சமா மோட்சமா.....உன்னை விட…
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கு அது மூடு துணி..(உன்னை)
உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா
நூறு ஜென்மம் வேணும்
அத கேட்குறேன் சாமியே
(என்ன கேட்குற சாமிய?
நூறு ஜென்மம் உன் கூட..போதுமா?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம்
அந்த சாமிய அந்த சாமிய
காத்தா அலைஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்
உன்னை விட இந்த உலகத்தில்
ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு
சொல்லிக்கிட யாருமில்லை எவளுமில்லை
வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
உன்னை விட ஒரு உறவுன்னு
சொல்லிக்கிட யாருமில்லை.......
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.