Song lyrics

Aasai Aasai Lyrics

ஆசை ஆசை பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Vidyasagar
Year
2003
Singers
Shankar Mahadevan, Sujatha Mohan
Aasai Aasai

Lyrics

Aasai Aasai Lyrics

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?

கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது?
(ஆசை ஆசை..)

தலை முதல் கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது எப்பொழுது?
ஓ.. இடைவெளி குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது?
அறுகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது?
திருவிழா ஆகிறேன் இப்பொழுது
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது?

ஆசை ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை

புல்வெளி ஆகிறேன் இப்பொழுது
நீ பனித்துளி ஆவது எப்பொழுது?
ஆ... கொட்டும் மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது?
கிணற்றில் சூரியன் இப்பொழுது
உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது?
புடவை கருவில் இப்பொழுது
நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது?
(ஆசை ஆசை..)

People

Related People

6 people