Chapter 11

செய்ந்நன்றியறிதல்

Seynnandri Aridhal

Gratitude

10 kurals

Kural 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
Unhelped in turn good help given Exceeds in worth earth and heaven
Kural 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
A help rendered in hour of need Though small is greater than the world
Kural 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
Help rendered without weighing fruits Outweighs the sea in grand effects
Kural 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
Help given though millet-small Knowers count its good palm-tree tall
Kural 105 உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
A help is not the help's measure It is gainer's worth and pleasure
Kural 106 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
Forget not friendship of the pure Forsake not timely helpers sure
Kural 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
Through sevenfold births, in memory fares The willing friend who wiped one's tears
Kural 108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
To forget good turns is not good Good it is over wrong not to brood
Kural 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
Let deadly harms be forgotten While remembering one good-turn
Kural 110 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
The virtue-killer may be saved Not benefit-killer who is damned