Chapter 116

பிரிவு ஆற்றாமை

Pirivaatraamai

Separation unendurable

10 kurals

Kural 1151 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
Tell me if you but do not leave, Your quick return to those who live
Kural 1152 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
His sight itself was pleasing, near Embrace pains now by partings fear
Kural 1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
On whom shall I lay my trust hence While parting lurks in knowing ones?
Kural 1154 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
He parts whose love told me -fear not Is my trust in him at default?
Kural 1155 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
Stop his parting -my life to save Meeting is rare if he would leave
Kural 1156 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
His hardness says, "I leave you now" Is there hope of his renewed love?
Kural 1157 துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
Will not my gliding bangles' cry The parting of my lord betray?
Kural 1158 இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
Bitter is life in friendless place; Worse is parting love's embrace!
Kural 1159 தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
Can fire that burns by touch burn like Parting of the hearts love-sick?
Kural 1160 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
Many survive pangs of parting Not I this sore so distressing