Chapter 124

உறுப்புநலன் அழிதல்

Uruppunalanazhidhal

Wasting Away

10 kurals

Kural 1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
To lift from want he left me afar His thought makes my eyes blush the flower
Kural 1232 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
My pale tearful eyes betray The hardness of my husband, away
Kural 1233 தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
These arms that swelled on nuptial day Now shrunk proclaim "He is away"
Kural 1234 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
Bracelets slip off the arms that have Lost old beauty for He took leave
Kural 1235 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
Bereft of bracelets and old beauty Arms tell the cruel's cruelty
Kural 1236 தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
Arms thin, armlets loose make you call My sire cruel; that pains my soul
Kural 1237 பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
Go and tell the cruel, O mind Bruit ov'r my arms and glory find
Kural 1238 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
The front of this fair one O paled As my clasping arms loosed their hold
Kural 1239 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
Cool breeze crept between our embrace Her large rain-cloud-eyes paled at once
Kural 1240 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
Pale eyes pained seeing the pallor Of the bright forehead of this fair