Chapter 126

நிறையழிதல்

Niraiyazhidhal

Reserve Overcome

10 kurals

Kural 1251 காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
Passion's axe shall break the door Of reserve bolted with my honour
Kural 1252 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
The thing called lust is a heartless power It sways my mind at midnight hour
Kural 1253 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
How to hide this lust which shows Itself while I sneeze unawares!
Kural 1254 நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
I was proud of my sex-reserve Lo lust betrays what I preserve
Kural 1255 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
Dignity seeks not a deserter But Love-sick is its innovator
Kural 1256 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
O Grief, my deserter you seek Of your caprice what shall I speak!
Kural 1257 நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
When lover's love does what it desires We forget all shame unawares
Kural 1258 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
The cheater of many wily arts His tempting words break through women's hearts
Kural 1259 புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம்
கலத்தல் உறுவது கண்டு.
In huff I went and felt at ease Heat to heart in sweet embrace
Kural 1260 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
To feign dislike is it not rare For mates who melt like fat in fire?