Chapter 45

பெரியாரைத் துணைக்கோடல்

Periyaaraith Thunaikkotal

Seeking the Aid of Great Men

10 kurals

Kural 441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
Weigh their worth and friendship gain Of men of virtue and mature brain
Kural 442 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
Cherish the help of men of skill Who ward and safe-guard you from ill
Kural 443 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
Honour and have the great your own Is rarest of the rare things known
Kural 444 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
To have betters as intimates Power of all powers promotes
Kural 445 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
Ministers are the monarch's eyes Round him should be the right and wise
Kural 446 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
To move with worthy friends who knows Has none to fear from frightful foes
Kural 447 இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
No foe can foil his powers whose friends reprove him when he errs
Kural 448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
The careless king whom none reproves Ruins himself sans harmful foes
Kural 449 முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
No capital, no gain in trade No prop secure sans good comrade
Kural 450 பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
To give up good friends is ten times worse Than being hated by countless foes