Chapter 63

இடுக்கண் அழியாமை

Itukkan Azhiyaamai

Hopefulness in Trouble

10 kurals

Kural 621 இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
Laugh away troubles; there is No other way to conquer woes
Kural 622 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
Deluging sorrows come to nought When wise men face them with firm thought
Kural 623 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
Grief they face and put to grief Who grieve not grief by mind's relief
Kural 624 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
Who pulls like bulls patiently on Causes grief to grieve anon
Kural 625 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
Before the brave grief grieves and goes Who dare a host of pressing woes
Kural 626 அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
The wise that never gloat in gain Do not fret in fateful ruin
Kural 627 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
The wise worry no more of woes Knowing body's butt of sorrows
Kural 628 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
Who seek not joy, deem grief norm By sorrows do not come to harm
Kural 629 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
In joy to joy who is not bound In grief he grieves not dual round!
Kural 630 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
His glory is esteemed by foes Who sees weal in wanton woes!