Chapter 82

தீ நட்பு

Thee Natpu

Evil Friendship

10 kurals

Kural 811 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
Swallowing love of soulless men Had better wane than wax anon
Kural 812 உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?
Who fawn in wealth and fail in dearth Gain or lose; such friends have no worth
Kural 813 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
Cunning friends who calculate Are like thieves and whores wicked
Kural 814 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
Better be alone than trust in those That throw in field like faithless horse
Kural 815 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
Friends low and mean that give no help- Leave them is better than to keep
Kural 816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
Million times the wise man's hate Is better than a fool intimate
Kural 817 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
Ten-fold crore you gain from foes Than from friends who are vain laughers
Kural 818 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
Without a word those friends eschew Who spoil deeds which they can do
Kural 819 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
Even in dreams the tie is bad With those whose deed is far from word
Kural 820 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
Keep aloof from those that smile At home and in public revile