Chapter 89

உட்பகை

Utpakai

Enmity within

10 kurals

Kural 881 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
Traitorous kinsmen will make you sad As water and shade do harm when bad
Kural 882 வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
You need not sword-like kinsmen fear Fear foes who feign as kinsmen dear
Kural 883 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
The secret foe in days evil Will cut you, beware, like potters' steel
Kural 884 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
The evil-minded foe within Foments trouble, spoils kinsmen!
Kural 885 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
A traitor among kinsmen will Bring life-endangering evil
Kural 886 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
Discord in kings' circle entails Life-destroying deadly evils
Kural 887 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
A house hiding hostiles in core Just seems on like the lid in jar
Kural 888 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
By secret spite the house wears out Like gold crumbling by file's contact
Kural 889 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
Ruin lurks in enmity As slit in sesame though it be
Kural 890 உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
Dwell with traitors that hate in heart Is dwelling with snake in selfsame hut