பொண்ணு பொண்ணு பொண்ணு பாடல் வரிகள்

Last Updated: Jul 14, 2026

Movie Name
Ellorum Vazhavendum (1962) (எல்லோரும் வாழவேண்டும்)
Music
Rajan–Nagendra
Year
1962
Singers
S. Janaki
Lyrics

பொண்ணு......பொண்ணு......பொண்ணு.....
பொண்ணு பொண்ணு பொண்ணு – இந்த
பூலோகம் காணாத புதுயுகப் பொண்ணு
ஆ.....ஆ......ஆ.....ஓ....ஓ....ஓ......

ஒண்ணு ரெண்டு மூணு என்று
எண்ணிப் பாருங்க அழகை
எண்ணிப் பாருங்க இந்த
ஊரில் என்னை மிஞ்சும் பெண்கள்
உண்டோ சொல்லுங்க நிகர்
உண்டோ சொல்லுங்க......ஆ....ஆ.....
கன்னி எந்தன் மீதில் இந்தக்
கோபம் ஏனுங்க வீண் கோபம் ஏனுங்க (பொண்ணு)

மின்னற்கொடி மேனி தங்கச் சிலைதானுங்க
சிந்தும் புன்னகைக்குக் கோடி பொன்னு விலைதானுங்க
கொஞ்சம் இங்கே பாருங்க ஆ....ஆ....ஆ...
அன்னநடை மாதென் விழி மொழி பேசுங்க
காதல் மொழி பேசுங்க
என் அங்கம் கண்டால் நெஞ்சில்
இன்ப அலை வீசுங்க........(பொண்ணு)