வான் முகத்தில் வைர நிலா பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Ellorum Vazhavendum (1962) (எல்லோரும் வாழவேண்டும்)
Music
Rajan–Nagendra
Year
1962
Singers
A. M. Rajah, Jikki
Lyrics
Villiputhan

வான் முகத்தில் வைர நிலா இருக்குதென்று
தேன் மலர்கள் சிரிப்பதைப் பார்
இன்பங் கொண்டு நான் விரும்பும்
நங்கையவள் வந்து விட்டால்
வான் நிலவும் தேன் மலரும் வணக்கம் சொல்லும்.....

நல்ல தமிழ் விளக்கே என்
உள்ளமெலாம் உனக்கெ
சொல்லித் தெரியணுமா காதல்
சொல்லித் தெரியணுமா – நான்
சொல்லித் தெரியணுமா – காதல்
கண்ணால் என் மேல் வெண்பா பாடும் (நல்ல)

கண்ணுக்குள்ளே நமக்கு – காதல்
பள்ளிக்கூடம் இருக்கு – இந்த
வண்ணக்கிளி உனக்கு – அத்தான்
வண்ணக்கிளி உனக்கு – இந்த
வண்ணக்கிளி உனக்கு – பேசும்
கண்ணால் என் மேல் வெண்பா பாடும் (கண்ணுக்குள்ளே)

இனிப்பான நேரம் கனிச்சோலையோரம்
எனை நாடி வாரும் இன்பக் கலைக்கோவில்...நீ...
எழுதாமல் உருவான சிலையாகும்...நீ.....

கலைக்கோவில் நெஞ்சில் கவிபாடிக் கொஞ்சும்
அழகே என் பேரின்ப தலைவாசல்.......நீ.....
அறங்கூறும் பொருளின்ப வழிகாட்டி.....நீ....
ஆகா கற்கண்டு அபிமானங் கொண்டு
அன்பால் என்மேல் வெண்பா பாடும்......(நல்ல)

வனராணி சோலை மகள் பூவைக் கண்டு
பனிவானம் புகழ்மாலை தனைச் சூடுதே
புனல் மேகம் மலையோடு விளையாடுதே....

பூவாத சோலை...பூவே....நீ...வா....வா...
புது வாழ்வின் முதற்பாடல் நாம் பாடுவோம்
புது வாழ்வின் அலங்காரப் பண் பாடுவோம்

ஆஹா ஆனந்தம் இதுவே பேரின்பம்
அன்பே இனி ஒன்றாய் வாழ்வோம்....(கண்ணுக்குளே)