சிரிக்கத் தெரிந்தால் போதும் பாடல் வரிகள்

Movie Name
Madapura (1962) (மாடப்புறா)
Music
K. V. Mahadevan
Year
1962
Singers
Lyrics
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்

வ‌ன‌த்துக்கு அழ‌கு ப‌சுமை
வார்த்தைக்கு அழகு இனிமை
குளத்துக்கு அழகு தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை
வ‌ன‌த்துக்கு அழ‌கு ப‌சுமை
வார்த்தைக்கு அழகு இனிமை
குளத்துக்கு அழகு தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை
சிரிக்கத் தெரிந்தால் போதும்.....

இர‌வும் ப‌க‌லும் உண்டு
வாழ்வில் இள‌மையும் முதுமையும் உண்டு
இர‌வும் ப‌க‌லும் உண்டு
வாழ்வில் இள‌மையும் முதுமையும் உண்டு
உற‌வும் ப‌கையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
உற‌வும் ப‌கையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு

சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்

உறவை வ‌ள‌ர்ப்ப‌து அன்பு
ம‌ன‌ நிறைவைத் த‌ருவ‌து ப‌ண்பு
பொறுமையை அளிப்ப‌து சிரிப்பு
இதை புரிந்த‌வ‌ர் அடைவ‌து க‌ளிப்பு
உறவை வ‌ள‌ர்ப்ப‌து அன்பு
ம‌ன‌ நிறைவைத் த‌ருவ‌து ப‌ண்பு
பொறுமையை அளிப்ப‌து சிரிப்பு
இதை புரிந்த‌வ‌ர் அடைவ‌து க‌ளிப்பு
சிரிக்கத் தெரிந்தால் போதும்....

ம‌னித‌ன் மாறுவ‌தில்லை
அவ‌ன் மாறிடில் ம‌னித‌னே இல்லை
ம‌னித‌ன் மாறுவ‌தில்லை
அவ‌ன் மாறிடில் ம‌னித‌னே இல்லை
வ‌ந்திடும் அவ‌னால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை

சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.