என் பூ நெஞ்சை பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Naadi Thudikuthadi (2013) (நாடி துடிக்குதடி)
Music
Ilaiyaraaja
Year
2013
Singers
Lyrics
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை 
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய் 
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன் 
காற்றில் வானொலி கேட்டேனே 
தீவில் வானவில் பார்த்தேனே 
எனை இரண்டும் பந்தை ஆடும் 
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை 
அள்ளி எங்கோ போனாய் அள்ளி எங்கோ போனாய் 

ஏறதோர் தேர் ஏறியே நான் போகிறேன்
எங்கோ எதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன் 
நீரலை போல நீ ஒரு பார்வை நேற்று பார்த்தால் 
நீர்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி உன்னை நினைக்குதே 
வெறும் நாள் எல்லாம் புது நாளாகும் 
இதுதான் மாயம் என்றே செய்தார் அவன் யாரோ 
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை 
அள்ளி எங்கோ போனாய் அள்ளி எங்கோ போனாய் 

நேற்றேன்னவோ பூ தந்தும் ஒர்வாசனை
பூவுக்கெல்லாம் யார்தான் தந்தார் ஆண்வாசனை தாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய் 
காதலின் பாஷை காலடி ஓசை என்று காதினை 
தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன் 
எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே 

என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை 
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய் 
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன் 
காற்றில் வானொலி கேட்டேனே 
தீவில் வானவில் பார்த்தேனே 
எனை இரண்டும் பந்தை ஆடும் 
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை 
அள்ளி எங்கோ போனாய் அள்ளி எங்கோ போனாய்